முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 28 ஆவது நினைவுநாள்

500

வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 10 மாவீர்களின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், ஆரம்பகால உறுப்பினரான, கேணல் கிட்டு, 1985இல் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் அந்தப் பொறுப்பை வகித்திருந்தார்.

சதிமுயற்சி ஒன்றில் காலை இழந்த அவர், இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், தாயகத்தில் இருந்து வெளியேறி, அனைத்துலக செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

1993ஆம் ஆண்டு இதே நாளில்,  குவேக்கர்ஸ் அமைப்பின் அமைதி திட்டத்துடன், கப்பல் மூலம் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த போது, கேணல் கிட்டு உள்ளிட்டவர்கள் பயணம் செய்த கப்பலை வங்கக் கடலில் இந்தியக் கடற்படையினர்  சுற்றிவளைத்த நிலையில், கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவினார்கள்.

கேணல் கிட்டு: சதாசிவம் கிருஷ்ணகுமார் – வல்வெட்டித்துறை

கடற்புலி கப்டன் குணசீலன் (குணராஜ்) : சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்

கடற்புலி கப்டன் றொசான் : இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்

கடற்புலி கப்டன் நாயகன் : சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை

கடற்புலி கப்டன் ஜீவா : நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். தூயவன் : மகாலிங்கம் ஜெயலிங்கம் – கண்டிவீதி, யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். நல்லவன் : சிலஞானசுந்தரம் ரமேஸ் –மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். அமுதன் : அலோசியஸ் ஜான்சன் – 2ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்

லெப். கேணல் குட்டிசிறி : இராசையா சிறிகணேசன் – சுதுமைலை வடக்கு, மானிப்பாய்.

மேஜர். வேலன் மலரவன் : சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை

ஆகிய மாவீர்களே அன்றைய நாளில் வீரச்சாவை தழுவினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *