முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படுவதான திட்டத்தினை கைவிடுவதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்

1236

மத்திய பொதுத் தேர்தல்களின் வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்ற தமது திட்டத்தினைக் கைவிடுவதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட உள்த்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் கரீனா கோல்ட்டுக்கு (Karina Gould) பதவியினை வழங்கிவைக்கும் நிகழ்வின்போதே பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மத்திய பொதுத் தேர்தலுக்கு முன்னர், வாக்குப் பதிவு நடைமுறைகளில் மாற்றத்தின ஏற்படுத்துவதான திட்டம் லிபரல் அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது குறித்த அந்த திட்டத்தினை தமது நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறை ஒன்றினை ஏற்படுத்த வேண்டிய தெளிவான தேவை ஒன்று ஏற்படவில்லை எனவும், அவ்வாறன ஒரு அவசியம் ஏற்படாத பட்சத்தில், இவ்வாறு தேசிய ரீதியிலான தேர்தல் முறை மாற்றம் என்பது கனடாவின் உடனடித் தேவையாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை லிபரல் கட்சி தனது தேர்தல் பரப்புரைகளிலும், பின்னர் ஜஸ்டின் ரூடோ தனது பதவியேற்பின் போதும் 2019தேர்தல் வாக்களிப்புக்கான முறைமையை மாற்றயமைப்பதாக உறுதியளித்திருந்த நிலையில், தற்போது அதனை மீறுவது சரியான நடவடிக்கை அல்ல என்று புதிய சனநாயகக் கட்சி சாடியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *