முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நவாலி படுகொலை நினைவேந்தல் இன்று உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது

645

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சுத் தாக்குதலின் 23 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.

நவாலி சென்.பீற்றர் தேவாலயத்தில் சிங்கள இனவாத அரசின் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் சுடரேற்றப்பட்டு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு யூலை மாதம் 09 நாளன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி சிறீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது சிறிலங்கா வான்படையின் மூன்று வானூர்திகள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல், வான் தாக்குதல்களின் உதவியுடன் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி சிறீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

அன்றுகாலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசியதில், குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியானதுடன், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இவர்களின் நினைவாக சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை றோய் பேடிணன் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அமைதி வணக்கம் செலுத்தினார்கள்.

இந்த நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், சஜீவன், மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் உறவுகள், பொது மக்கள், அருட்சகோதரர்கள், சிறுவர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *