முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நாளை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா

1321

இந்தியா-இலங்கை கடல் பகுதியில் உள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் 2 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. இரவில் தேர் பவனி மற்றும் சிறப்பு ஆராதனை நடக்கிறது.

நாளை மறுநாள் காலை திருவிழா திருப்பலி நடைபெற உள்ளது. இலங்கை மற்றும் தமிழக பங்குத்தந்தையர்கள் இதனை நடத்துகின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 62 படகுகளில் 2,103 பேர் செல்ல பதிவு செய்துள்ளனர். அவர்கள் நாளை காலை 6 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படுகின்றனர். சுங்க இலாகா, வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் சோதனைக்கு பிறகு அவர்கள் இங்கிருந்து பயணமாகின்றனர்.

தமிழக மீனவர்கள் 60 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தையும், 2 அடி உயரம் உள்ள புனித அந்தோணியார் சொரூபத்தையும் எடுத்துச் செல்கின்றனர்.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) விழா முடிந்ததும் மாலையில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் வருவார்கள்.

கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான அனுமதியை கேட்டு அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டுப்படகில் செல்ல அனுமதி இல்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *