முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இஸ்லாமாபாத்தில் எதிர்க்கட்சிகளின் முற்றுகை போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.,

403

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இஸ்லாமாபாத்தில் வலதுசாரி தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் தலைமையில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் முற்றுகை போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக நாளை தேசியளவில் சாலை மறியல் போராட்டங்களை நடத்தும்படி மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜமையாத் உலிமா-இ-இஸ்லாம் என்ற வலதுசாரி கட்சி தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் தலைமையில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கடந்த அக்டோபர் 21ம் தேதி கராச்சியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக வந்தனர்.

அக்டோபர் 31ம் தேதி இஸ்லாமாபாத்தை அடைந்த அவர்கள் அங்கேயே முற்றுகையிட்டு போராட்டம் நடத்த துவங்கினர். இந்த போராட்டத்தில் பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சிகளான நவாப் ஷரிஃப்பின் முஸ்லிம் லீக், பெனசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்துகொண்டன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொது தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாகிஸ்தானில் மீண்டும் தேர்தல் நடைபெற வேண்டும் என்று மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் நிபந்தனை விதித்தார். ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்க இம்ரான் கான் மறுத்துவிட்டார்.

போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இம்ரான் கான் பதவி விலகி,மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் அறிவித்தார்.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் முற்றுகை போராட்டம் துவங்கி 2 வாரங்கள் ஆன நிலையில் இன்று திடீரென்று மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

போராட்டக்காரர்கள் முன்னிலையில் பேசிய மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் இது போராட்டத்தின் அடுத்தக்கட்டத்தை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது என அறிவித்தார்.

பாகிஸ்தான் அரசு வலிமை இழந்துவிட்டது. அதற்கு சிறிது அழுத்தம் தேவை. எனவே நாளை (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய தெருக்கள் அனைத்திலும் மறியல் போராட்டம் நடைபெற வேண்டும்.

எனவே இப்போது வீட்டுக்கு திரும்புங்கள். ஆனால் ஓய்வெடுக்க உங்களுக்கு நேரமில்லை. நாளை அவரவர் பகுதியில் போராட்டத்தை நடத்துவதற்கான பொறுப்பு உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது என மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் தெரிவித்தார்.

நாளை நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடும்படி தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *