முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பா.ம.க. புதுவையில் தனித்து களமிறங்க முடிவு

270

புதுவையில் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ள பா.ம.க. முதல் கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

புதுவையிலும் இக்கூட்டணி நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புதுவை ஜனதா கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ஜ.க. 9 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.

பா.ம.க.வுக்கு 3 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என அக்கட்சி மாநில அமைப்பாளர் தன்ராஜ் வலியுறுத்தி வந்தார். ஆனால் பாரதிய ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு தொகுதி கூட வழங்கவில்லை.

இதனால் ஜனதா கூட்டணியில் இருந்து புதுவை பா.ம.க. விலகியது. தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக 9 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *