முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரிட்டிஷ் ஏர் வேஸ் விமான சேவையில் கோளாறு: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி

1144

பிரிட்டிஷ் எயர் வேஸ் விமான சேவையின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் பல மணி நேர தாமத்த்தை எதிர் கொள்ள நேரிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் ஹித்ரோ கற்விக் விமான நிலையங்கள் உட்பட நெதர்லாந்தின் அமெஸ்ரடாம் எடின்பேர்க் கனடாவின் ரொறொன்ரோ ஜேர்மனியின் பெர்லின் மற்றும் வியன்னா ரோம் உட்பட 20 க்கும் அதிகமான விமான நிலையங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயணிகளின் விமான பயணச்சீட்டுகளை சரிபார்க்க முடியாது விமான சேவையின் கணினி கட்டமைப்பு கோளாறுக்குள்ளாகியதை தொடர்ந்து விமான பயணங்களும் நீண்ட நேரம் தாமதித்தது.

கடந்த பல மணி நேரமாக நீடிக்கும் இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டிருக்கும் அதேவேளை பிரிட்டிஷ் எர் வேஸ் பணியாளர்கள் கைகளால் எழுதிய விமானத்தில் ஏறுவதற்கான அட்டைகளை விநியோகித்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *