முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்

548

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஐ தொட்டு்ள்ள நிலையில், காட்டுத்தீப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உதவுவதற்காக கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் தழுவிய அளவில் கிட்டத்தட்ட 600 இடங்களில் எரிந்துவரும் காட்டுத்தீ காரணமாக ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பெருமளவானோர் எந்த நேரமும் வெளியேறத் தயாரான நிலையில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் தீயணைப்ப நடவடிக்கைகளில் உதவிகளை வழங்கிவரும் மத்திய அரசாங்கம், வானூர்திகள் மற்றும் இராணுவத்தினரை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

காட்டுத்தீப் பரவலைக் கட்டுப்படுத்த உதவுமாறு பிரிட்டிஷ் கொலம்பிய மாநில அரசினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இந்த உதவிகளை வழங்குவதாக, மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் றால்ஃப் குட்டேல்(Ralph Goodale), மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உதவுவதற்காக உடனடியாக 200 இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுவதாகவும், தீயணைப்பாளர்களை அழைத்துச் செல்வதற்கும், தீயணைப்பு உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கும், மருத்துவ வெளியேற்றங்களுக்கு உதவுவதற்கும், தூர இடங்களில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்குமாக வானூர்திகளும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 27 வெளியேற்ற உத்தரவுகளுக்கு அமைய ஏறக்குறைய 3,100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 43 வெளியேற்ற எச்சரிக்கைகளுக்க ஏற்ப கிட்டத்தட்ட 17,900 பேர் வெளியேறத் தயாரான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் 3,400க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பிரிட்டிஷ் கொலம்பியா மட்டுமின்றி நாட்டின் ஏனைய மாநிலங்கள், மெக்சிக்கோ, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோரும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *