முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது!

731

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், கொலம்பியா மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பட்டியலொன்றை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது.

சுகாதார செயலாளர் ஜூலியோ சார்ளஸின் பரிந்துரையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும், தளர்ந்த ஆடைகளை அணிய வேண்டும் என பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், மக்கள் தங்களது உடல் நிலையை சீராக பேண முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் தற்போது 566 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருவதுடன், 1,500க்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வரையில் 1,800க்கும் அதிகமான காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதனால் சுமார் 3,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுதீ கட்டுப்பாட்டு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *