முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

போர் வீரர்கள் என்பதற்காக தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது- சரத்பொன்சேகா

265

மிருசுவில் படுகொலை மற்றும் 11 மாணவர்களை கொலை செய்தவர்கள் போர் வீரர்கள் என்பதற்காக அவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு மூலம் அரசாங்கம் குற்றவாளிகளை விடுவிக்கவும் எதிர்க்கட்சியின் பிரஜாவுரிமையை பறிக்கவும் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

11 மாணவர்களை படுகொலை செய்தவர்கள், மிருசுவில் கொலையாளிகள், அவன்கார்ட் ஊழலில் ஈடுபட்டவர்கள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் அரசாங்கத்திற்கு உள்ளதென சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட தசநாயக, சுமித் ரணசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.

பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளிவந்த நேரத்தில் அவர்களை கொலைசெய்து கடலில் போட்டனர்.

இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சியில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும். இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளகூடிய விடயமல்ல என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சுனில் ரத்நாயக உள்ளிட்டவர்கள் இராணுவ சிப்பாயாக இருந்தாலும், அனாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *