முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மண்டைத்தீவில் வள்ளம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

1043

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு கடற்பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் பலியான 6 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 1.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மண்டைத்தீவிற்கு சென்ற 14 பேரில் 7 பேர் சிறுதீவிற்கு வள்ளத்தில் சென்றுள்ளனர்.

இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றுமொருவர் தப்பிச்சென்று கடற்படையினருக்கு தகவல் வழங்கியதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க குறிப்பிட்டார்.

உரும்பிராய் , சண்டிலிப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *