முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மரபுவழித் தாயகத்தை அடியொற்றி பொலிகண்டிப் பிரகடனம் வெளியீடு

433

உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

அந்தப் பிரகடனத்தில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றதுமான இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

தமிழிரின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுதும், பௌத்தமயமாக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களிடத்தில் இருந்து பறிக்கப்பட்ட காணிகள் மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் சுரண்டப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்காக போராடும் மயைக உறவுகளின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனஸாக்களை வலிந்து இழுக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசாங்கத்தினை ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் தீர்மானம் எடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இழைக்கப்பட்ட அனைத்து மீறல்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழினத்தின் இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம் என உறுதி எடுக்கப்பட்டுள்ளது.

பிரகடனத்தினை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *