முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மிருகங்கள் பறவைகளிடையே பரவிவந்த H3N2 தொற்று மனிதருக்கு பரவியுள்ள முதலாவது சம்பவம் கனடாவில் பதிவாகியுள்ளது.

1301

மிருகங்கள் மற்றும் பறவைகளிடையே பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த H3N2 வைரஸ் தொற்று முதன்முறையாக கனடாவில் மனிதருக்கு பரவியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த இந்த சம்பவம் சுகாதரத்துதறை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், W.H.O. எனப்படும் உலக சுகாதார நிறுவனத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த கிருமித் தொற்றுக்கு ஒக்டோபர் மாதம் 24ஆம் நாள் இலக்கான ஒருவர், நவம்பர் மாதம் 8ஆம் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலை சீராகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பன்றிப் பண்ணை ஒன்றிலிருந்து இவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 16ஆம் நாள் இதனை உலக சுகாதார நிறுவத்திற்கு தெரியப்படுத்தியுள்ள அதிகாரிகள், இது ஏனையோருக்கும் பரவும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

H3N2 வகையிலான பன்றிக் காய்ச்சல் தற்போது வட அமெரிக்க நாடுகளில் உள்ள பண்ணைகளில் பரவிவரும் நிலையில், இது மனிதருக்கு தொற்றும அபாயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த கிருமி மனிதருக்கு தொற்றும் சம்பவங்கள் சில உலகின் ஏனைய பகுதிகளிலும் பதிவாகியுள்ள போதிலும், அவை மிகவும் பாதிப்பு குறைந்த அளவிலேயே காணப்பட்டதாகவும், கனடாவில் இருந்து தற்போதுதான் முதன் முறையாக இவ்வாறான ஒரு சம்பவம் உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *