முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மெக்கானிக் 2 – திரை விமர்சனம்

1855

மெக்கானிக் முதல்பாதியில் ஜேசன் பணத்துக்காக கொலைகள் செய்வதை தொழிலாக செய்து வருகிறார். அதையே, இந்த பாகத்திலும் தொடர்கிறார். இந்த பாகத்தில் வில்லனான சாம் மூலமாக ஜேசனுக்கு மூன்று பேரை கொல்ல வேண்டும் என்று ஒரு வேலை வருகிறது.

ஆனால், ஜேசனோ இந்த கொலைகளை செய்ய மறுக்கிறார். அவன் அந்த கொலையை செய்யாவிட்டால், ஜேசனை கொன்றுவிடுவதாக சாமின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்.

இதனால், ஜேசன் அவர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து, தீவில் தஞ்சம் புகுகிறார். அந்த தீவில் ஜெசிகா ஆல்பாவை சந்திக்கும் ஜேசன், அவள் சாம் மூலமாக தன்னை நோட்டமிட வந்தவள் என்பதை தெரிந்து கொள்கிறார். அவளிடம் சென்று விசாரிக்கையில் அவளும் அதை ஒத்துக் கொள்கிறார்.

இருப்பினும், இருவரும் காதல்வயப்பட்டு, நெருக்கமாகிறார்கள். இந்நிலையில், சாம், ஜெசிகா ஆல்பாவை தனது ஆட்களை வைத்து கடத்தி விடுகிறார். தான் சொன்ன மூன்று கொலைகளை ஜேசன் செய்தால் அவளை விட்டுவிடுவதாக கூறுகிறார்.

இறுதியில், ஜேசன், சாம் சொன்ன அந்த மூன்று கொலைகளையும் செய்து தனது காதலியை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

மெக்கானிக் படங்களில் ஒரு கொலையை எப்படி திட்டமிட்டு செய்கிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யமே. அந்த சுவாரஸ்யத்தை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார்கள்.

ஜேசன் கொலைகளை செய்ய திட்டம் போடும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல், வித்தியாசமான ஆயுதங்களை அவர் பயன்படுத்தும் முறைகள் எல்லாம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. இவருடைய நடிப்பில் எதுவும் குறை சொல்ல முடியாது என்பதுபோல் இருக்கிறது.

ஜெசிகா ஆல்பா பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கிறார். இவருக்கும் ஜேசனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இல்லை. என்னதான் கதை சிம்பிளாக இருந்தாலும், ஜேசனின் ஆக்ஷன் காட்சிகள் படத்தை ரொம்பவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது. இறுதியில் டாமி லீ ஜோன்ஸ் வரும் காட்சிகளும் சிறப்பாக இருக்கின்றன.

மொத்தத்தில் ‘மெக்கானிக் 2’ அதிரடி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *