முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மைத்திரிபால சிறிசேன, ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் விசாரணைகளை எதிர்நோக்க நேரிடும்

400

இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் விசாரணைகளை எதிர்நோக்க நேரிடும் என்று பிலிப்பைன்ஸ் மனித உரிமை நிறுவனமொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸில் இயங்கி வரும் ஐடிபென்ஸ் என்னும் மனித உரிமை நிறுவனமே இவ்வாறு மைத்திரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் பிலிப்பைன்ஸ் அரச தலைவர் ரொட்டிறிகோ டுரேட்டோ (சுழனசபைழ னுரவநசவந) பின்பற்றி வரும் கொள்கைகள் உலகிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று அண்மையில் பிலிப்பைன்ஸ்க்கு பயணம் மேற்கொண்ட இலங்கை அரச தலைவர் மைத்திரி புகழாரம் சூட்டியிருந்தார்.
பிலிலிப்பைன்ஸ் அரச தலைவரின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மனிதாபிமான பேரவலமாக நோக்கப்பட வேண்டுமே தவிர, இந்த வழிமுறைகளை எவரேனும் பின்பற்றக் கூடாது என்று மனித உரிமை கண்காணிப்பகத்தில் ஆராய்ச்சியாளராக கடமையாற்றி வரும் ஊயசடழள ஊழனெந சுட்டிக்காட்டியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் அரச தலைவர் போதைப் பொருள் ஒழிப்பு என்ற பெயரில் ஆயிரக் கணக்கான அந்நாட்டுப் பிரஜைகளை படுகொலை செய்துள்ளதாக சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுக்களும் கண்டணங்களும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கை அரச தலைவர் பிலிப்பைன்ஸிற்கான பயணத்தின் போது, அந்நாட்டு அரச தலைவரை புகழ்ந்துரைத்தமை மனித உரிமை அமைப்புக்களினால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *