முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24,ஆம் 25ஆம் நாள்களில்

357

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24,ஆம் 25ஆம் நாள்களில் இடம்பெறவுள்ளது.

இரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது,

துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் முன்னிலையில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கில் இந்த பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

இரண்டு நாள்கள் – ஆறு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறும் என்றும்,  முதலாம் நாள் 1388 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும்,  இரண்டாம் நாள் 1220 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *