முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

விஜயகலாவின் உரையை வரவேற்ற அரச பணியாளர்கள், மன்னிப்புக் கோரும் கடிதங்களை எழுதித்தருமாறு பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

735

கடந்த திங்கட்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜயகலாவின் உரையை வரவேற்று கைதட்டிய மற்றும் ஆரவாரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆண் அரச பணியாளர்கள், மன்னிப்புக் கோரும் கடிதங்களை எழுதித்தருமாறு பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயகலா தனது உரையில் விடுதலைப் புலிகள் தெடர்பில் உரையாற்றியிருந்தார் என்பதுடன், அதன் போது வெளிவிவகார மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்கள், முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மண்டபத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் கைதட்டி ஆரவாரித்ததாக அரச பணியாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அதற்கு விளக்கம் கோரி அரச அதிபரினால் பிரதேச செயலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இது தொடர்பிலேயே நிகழ்வில் பங்கேற்றிருந்த ஆண் அரச பணியாளர்களிடம் பிரதேச செயலர்கள் மன்னிப்புக் கோரல் கடிதங்கள் கோரியிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த அந்த நிகழ்வின்போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோர் உரையாற்றிய சந்தர்ப்பங்களில், கை தட்டியோ விசிலடித்தோ ஆரவாரம் செய்யவில்லை என்று உறுதிபகர்வதோடு, என்னை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்திருப்பின் அதற்காக மன்னிப்புக் கோருவதோடு, இனிவரும் காலங்களில் அவ்வாறு அநாகரீகமான நடந்துகொள்ளடமாட்டேன் என்று உறுதியுரைபகர்கின்றேன் என்று கடிதமெழுதி கையொப்பமிட்டு தருமாறு அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலர்களினால் பணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *