முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வெளிவிவகார அமைச்சின் கட்டுப்பாட்டு அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளது

1084

வெளிவிவகார அமைச்சின் கட்டுப்பாட்டு அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளது. நாளைய தினம் இந்த அலுவலகம் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோருடன் அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த பிராந்திய அலுவலகம் பல்வேறு வசதிகளை மக்களுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான பிறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *