கடந்த 25ஆம் திகதி வெளியாகிய வேலையில்லா பட்டதாரி 2ஆம் பாகத்தின் ரெய்லர், 1கோடி மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்தின் 2ஆவது மகள் சவுந்தர்ஜாவின் இயக்கத்தில் தனுஷின் கதை, வசன உருவாக்கத்தில் VIP-2 தயாராகியுள்ளது.
குறித்த திரைப்படம் எதிர்வரும் 28ஆம் திகதி, ஜூலை தனுஷின் பிறந்தநாளன்று வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் VIP 2ஆம் பாகத்தில் தனுஷ் உடன் அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா, என பல முன்னணி கதாபாத்திரங்கள், நடித்துள்ளனர்.
அத்துடன் இந்தப் படத்தில் ‘ஷான் ரோல்டன்’ இசையில் உருவாகியுள்ள பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் குறித்த படத்தின் ரெய்லர் 1கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளமையினால் வேலையில்லா பட்டதாரி 2ஆம் பாகம் வெற்றிப்படமாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.