முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

250

அமெரிக்காவின் டெக்ஸாஸ் (texas) மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியதில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெக்ஸாஸ் (texas) மாகாணத்தில் போர்ட் வோர்த் ( Fort Worth) நகரில் உள்ள பிரதான சாலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

கொள்கலன் பாரஊர்திகள் முதல் சிறிய ரக மகிழுந்துகள் வரை சுமார் 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 65 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

சாலைகளை மறைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டதே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட சாலை மூடப்பட்டு தீயணைப்பு வீரர்களின் துணையுடன், விபத்தில் சிக்கிய வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *