முக்கிய செய்திகள்

103 வயது பெண் கொரோனாவினால் மரணம்

112

சிறிலங்காவில் 103 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.

காலி கிரிமங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் அவரது சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை தெரிய வந்துள்ளதாக காலி மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரியந்த டி சில்வா குறிப்பிட்டார்.

அவரின் பூதவுடல் தொடர்பான இறுதிக்கிரியைகள் தடல்ல தகனசாலையில் நேற்று இடம்பெற்றது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த அதிக வயதுடையவர் இவரென தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *