11 பேர் பாதுகாப்புத் தரப்பினரால் சுட்டுக்கொலை

13

மியன்மார் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக, நடந்து வரும் தொடர் போராட்டத்தில் இன்றும் 11 பேர் பாதுகாப்புத் தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

போராட்டக் காரர்கள் நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில பொருட்களைக் கொண்டு காவல்துறையினருக்கு எதிராகப் போராடியதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மியன்மாரின் டேஸ் நகரில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, ஆறு வாகனங்களில், படையினர் அழைத்து வரப்பட்ட போதும், எதிர்ப்பாளர்கள் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கத்திகளை வைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டதால், மேலதிகமாக ஐந்து வாகனங்களில் படையினர் கொண்டு வரப்பட்டதாகவும், கூறப்படுகிறது.

போராட்டக்காரர்கள் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களின் தாக்குதலில் மியான்மார் அரசுப் படையினர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *