முக்கிய செய்திகள்

11 மாணவர்களை கொன்ற அனைத்துப் படையினரையும் தூக்கில் போட வேண்டும் என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

830

இராணுவத்தினரின் பெயரில் மனித கொலைகளை புரிந்த அனைவரையும் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தி மரண தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போன 11 பேரில் ஒருவரான ராஜீவ் நாக நாதன் ஒரு மருத்துவ மாணவன் என்பதையும், அந்த கால கட்டத்தில் சத்துர சேனாரத்ன மருத்துவ பீடத்தில் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்றார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது மகன் சத்துர சேனாரத்ன அவ்வாறு கடத்தப்பட்டிருந்தால் எத்தகைய ஒரு வேதனையை அனுபவித்திருப்பேன் என்பதை தன்னால் உணர முடியும் எனவும், அதே உணர்வும் வேதனையும் காணாமல் ஆக்கப்பட்ட ராஜீவ் நாக நாதனின் பெற்றோருக்கும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலையாளி ஒருவர் ராணுவ வீரனாக முடியாது எனவும், இராணுவ வீரன் ஒருவர் கொலையாளியாக முடியாது என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்திற்காக மாணவர்களை கொல்கின்றவர்கள் இராணுவ வீரர்களாயின், இராணுவ வீரர்கள் என்பவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ள ராஜித சேனாரத்ன, எனவே 11 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *