முக்கிய செய்திகள்

11 முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்யத் தீர்மானம்

46

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற 11 முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாணை அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடுமென அடையாளம் காணப்பட்ட புர்காவைத் தடை செய்தல், இஸ்லாமிய பாடப் புத்தங்களில் உள்ள அடிப்படைவாத கல்வியை நீக்குதல், மதரஸா கல்வியை ஒழுங்குபடுத்தல் போன்ற விடயங்களிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவருக்கும் அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவில் பயங்கரவாதத் தாக்குதல்களை இலகுவாகத் தடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளமை விசாரணைகளில் தெளிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் நாட்டின் புலனாய்வுத் துறையை முற்றாக சீர்குலைத்து, இராணுவத்தினரை வலுவிலக்கச் செய்திருந்ததாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *