உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா முதலாம் இடத்தை வகிப்பதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகின் சிறந்த நாடுகள் தொடர்பிலான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகியன இணைந்து நடத்திய ஆய்வுகளின் மூலம் உலகின் சிறந்த நாடுகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்க உள்ளிட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த 36 நாடுகளில் வாழும் இருபதாயிருத்து மூந்நூறு பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அறுபத்து ஐந்து விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு இந்த நபர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகிப்பதுடன், உலகின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றது.

உலகின் மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகிப்பதுடன், உலகின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றது.
Jan 24, 2019, 00:32 am
704
Previous Postதமிழ் ஊடகவியலாளர். சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 13 ஆவது நினைவு நாள்!
Next Postபனி படர்ந்த காலநிலையினால் நயாகரா நீர் வீழ்ச்சி - பனிப் பாறைகளாக காட்சி!