மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஊடக நிறுவன பிரதானிகளை இன்று சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக மைத்திரி தரப்புடன் இணைந்து கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கு முன்னர் மக்களின் மத்தியில் எமது தரப்பு தொடர்பாக காணப்பட்ட ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் ஆர்வத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் ஒக்ரோபர் 26ஆம் திகதி அரச தலைவர் தேர்தல் பற்றி பேசப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
Mar 26, 2019, 13:31 pm
364
Previous Postபிரதம நீதியரசர் பதவிக்காக முன்னாள் நீதி அமைச்சர் ஜோடி வில்சன் ராய்போல்ட் செய்த பரிந்துரையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நிராகரித்திருந்தார்
Next Postபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட காவல்துறை எஸ்.பி. பாண்டியராஜன் மீதும்,