2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர்க் கட்சியான மஹிந்த ஆதரவு அணியும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன.
அத்துடன், அரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த மார்ச் திங்கள் ஐந்தாம் நாள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன.
2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது
Apr 05, 2019, 23:53 pm
424
Previous Postகொன்சவேடிவ் மாகாண அரசு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Next Postசெயற்கை நுண்ணறிவு சார் ஒழுக்க விதிகளை கண்காணிக்கும் நோக்கில் கூகுள் நீறுவனத்தினால் நிறுவப்பட்ட பேரவை கலைக்கப்பட்டுள்ளது.