முக்கிய செய்திகள்

முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனிக்கு அவசர சத்திரசிகிச்சை

43

அவசர சத்திர சிகிச்சைக்குப் பின்னர் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனியின் (Brian Mulroney) உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

81வயதாகும் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை, அவருடைய புதல்வியும், ஒன்ராரியோ போக்குவரத்து அமைச்சருமான, கரோலின் மல்ரோனி, (Caroline Mulroney)தனது தந்தையார் தற்போது நன்றாக உள்ளர் என்றும் விரைவில் வீடுதிரும்பி ஓய்வெடுப்பார் என்றும் கீச்சகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *