16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று

28

16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே மக்கள் வாக்களிக்க ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்தனர். இன்று இரவு 7 மணி வரை பதிவு நடைபெற்றது

6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மையம் கூட்டணி, அ.ம.மு.க. – தே.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

முதல்வர் கே பழனிச்சாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரி ரி வி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலுக்காக 88 ஆயிரத்து 938 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிரு ப்பதோடு ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 91 ஆயிரத்து 180 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *