தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 234 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 1800 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 7 ஆயிரம் வேட்பு மனுக்களும், இன்று காலை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன், பிரேமலதா, கமல் உள்ளிட்ட தலைவர்களின் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத், திருச்சி மேற்கில் திமுக.வின் கே.என்.நேரு, தாராபுரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன், குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணி, ராசிபுரத்தில் அமைச்சர் சரோஜா, மற்றும், வானதி சீனிவாசன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களை விலக்கிக் கொள்வதற்கு நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.