20 தமிழர்கள் மன்னாரில் கைது

27

வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றார்கள் என்று கூறி முச்சக்கரவண்டியில் சென்ற 20 தமிழர்களை சிறிலங்கா கடற்படையினர் மன்னாரில் கைது செய்துள்ளனர்.

சிலாவத்துறை- கொண்டச்சிகுடா பகுதியில் நான்கு முச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட 15 ஆண்களும், 13 வயது சிறுமி உள்ளிட்ட ஐந்து பெண்களும் அடங்கியுள்ளனர்.

இவர்களில் 9 பேர் முல்லைத்தீவையும், 4 பேர் யாழ்ப்பாணத்தையும், 4 பேர் மன்னாரையும், சேர்ந்தவர்கள் என்றும், ஏனைய மூவரும், வத்தளை, புத்தளம், வாழைச்சேனை ஆகிய இடங்களைச் சேர்நதவர்கள் என்றும் சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், முச்சக்கர வண்டிகளுடன் சிலாவத்துறை காவல் நிலையத்தில் சிறிலங்கா கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *