பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைப்பதே பெரிய விசயம். ஆனால் லண்டன் நடிகை எமிஜாக்சனுக்கு ஐ படத்தை அடுத்து இப்போது 2.ஓ படத்திலும் நாயகி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆக, ஷங்கரின் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்றிருக்கிறார் எமி. மேலும், 2.ஓ படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்கும் எமிஜாக்சன் ரோபோவாக நடிப்பத்தாகத்தான் முதலில் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அவர் ரோபோவாக நடிக்கவில்லை. ஒரு ஆக்சன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பெரும்பாலும் தனது படங்களுக்கான காட்சிகள் வெளிநாடுகளிலேயே அதிகமாக படமாக்கும் ஷங்கர், இந்த படத்திற்கான அதிகபட்ச காட்சிகளை சென்னையை சுற்றியே படமாக்கிவிட்டார். தற்போதும் சென்னையில்தான் 2.ஓ படப்பிடிப்பு பிரமாண்ட செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த செட்டில் எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு அதிரடியான சண்டை காட்சியை கடந்த சில தினங்களாக படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சண்டை காட்சியில் நடிப்ப தற்காக ஒரு மாத காலம் எமிஜாக்சனுக்கு தீவிரமான பயிற்சி கொடுத்து தற்போது அவரை களமிறங்கி விட்டிருக்கிறார்கள்.