அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஹிலாரி கிளிண்டன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயோர்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் வாஷிங்டனின் பென்டகன் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்கும் முன்னர் ஹிலாரி இதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் குறித்த நிகழ்வில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹிலாரி கிளிண்டன், தாம் தற்போது சிறந்த உடல் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.