தமிழ்நாட்டில் கடலுார், விழுப்புரம், பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாவில் நில நடுக்கம் நன்றாக உணரப்பட்டுள்ளது.
இதேபோல் பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களிலும், விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் சரியாக நள்ளிரவு 1.05 மணி அளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் விழுப்புரம், பெரம்பலுார், கடலுார் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என நிலநடுக்கத்துறை இயக்குநர் மீனாட்சிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆய்வு மையத்தில் லேசான நில அதிர்வு கூட பதிவாகவில்லை என்று தெரிவித்த அவர், கொடைக்கானல், சேலத்தில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்திலும், டெல்லி ஆய்வு மையத்திலும் கூட நில அதிர்வு உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.