ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் என தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அரசாங்கம் உறுதி மொழிகளை வழங்கிய போதிலும், அனைத்துலக விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குதல் உள்ளிட்ட விடயங்களில் பின்வாங்கியுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் வென்றெடுக்க வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும், அதனை இலங்கை அரசர்ஙகம் நிறைவேற்றவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதும் கூட மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதாக சனாதிபதி உறுதி அளித்துள்ளதாகவும், அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கம் மீதுள்ள நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்துவிடுவார்கள் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.