13ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கினால் மாத்திரமே 13ஆவது திருத்த சட்டமானது அர்த்தமுள்ளதாக அமையும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரே வழி அதிகாரப்பகிர்வு மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வானது அதிகாரப்பகிர்வின் அடிப்படையிலேயே தீர்க்கப்படவேண்டும் என்பதில் தொடக்கத்திலிருந்தே தாம் உறுதியாக உள்ளதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.