இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, நாட்டில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாக, இனப்பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்துலக அரசதந்திர நடவடிக்கைகளும் இந்த விடயத்தில் அரசுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நிர்மாணக்கப்பட்டுள்ள மேலதிக செயற்பாட்டுக்கான நான்கு மாடி கட்டிடத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் இன்னும் சில மாதங்களில் ஒரு எல்லைக்கு வரமுடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அனைத்துலக சமூகமும் அதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதென்பதை பிரதமர் அறிவார் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.