இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 19பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்றான ஜாவாத் தீவில் இந்த அனர்த்தத்தில் சிக்கி மூன்று போர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
கிழக்கு ஜாவாவின் கரட் நகரில் இன்று பெய்த கடும் மழையில் திடீர்வெள்ளம் ஏற்பட்டதாகவும், வெள்ள மட்டம் வேகமாக இரண்டு மீற்றர் உயரத்திற்கு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.