காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டிடத்தொகுதியில் சிறப்புக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு மேலதிகமாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரை பலவந்த காணாமல் போதல்களுக்கு எதிரான ஆசிய ஒழுங்கமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் உள்ளிட்ட அமைப்புக்கள் ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டத்தொடரில் காணாமல் போனோரது உறவினர்கள் தங்களின் நிலவரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க உள்ளதாக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் காணாமல் போனார் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை, அனைத்துலக நிபுணர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் போனோரின் குடும்பத்தினரது பார்வையின் கீழ் தீர்ப்பது தொடர்பில் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டவுள்ளது.
பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.