தமிழ் மக்களின் உரிமைக்குரலை மீண்டும் ஒரு தடவை உலகிற்கு அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியில் வவுனியா மாவட்ட மக்களும் கலந்து கொள்ளும் முகமாக இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் வரலாற்று கடமையை நிறைவேற்ற வரவிரும்பும் தமிழ் பற்றாளர்கள், தமிழ் மக்கள் நாளை காலை 6 மணிக்கு சிந்தாமணிபிள்ளையார் கோவில் முன்பாக கூடுமாறும், அங்கு வர முடியாதவர்கள் ஏ9 வீதியில் நின்று எழுக தமிழ் அடையாளத்துடன் வரும் பேரூந்துகளை மறித்து ஏறி நீங்களும் பங்கு பற்ற முடியும்.
வர்த்தக பெருமக்கள், தனியார் கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் என்பன நாளை விடுமுறை விடுத்து இந்த பேரணியில் குழு குழுவாகவும், தனித் தனியாகவும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் உரிமைக் கோரியை முரசறைய ஒன்று கூடுமாறு அழைக்கின்றோம் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.