பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவராக ஜெரமி கோர்பின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கடும் போட்டியை தொடர்ந்தே, பிரிட்டனில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி உறுப்பினரும் இடதுசாரியாளருமான ஜெரமி கோர்பின் மீண்டும் அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதற்காக நடாத்தப்பட்ட தேர்வில் இடதுசாரியாளரான ஜெரமி கோர்பின் 62சதவீதமான வாக்குகளைப் பெற்று, அவருடைய ஒரே போட்டியாளரான ஓவன் ஸ்மித்தை தோற்கடித்துள்ளார்.
பிரிட்டனில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி விளங்கும் நிலையில், ஜெரமி கோர்பின் என்பவரே எதிர்கட்சியின் தலைவராக முன்னரும் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவருடைய தலைமையின் கீழ் இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை நம்பிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தலைவர் பதவிலிருந்து அவரை வெளியேற்ற விரும்பிய நிலையில், எதிர்கட்சித் தலைவருக்கான தேர்வு மீண்டும் நடாத்தப்பட்டது.
எனினும் இந்த தேர்விலும் அவர் அதிக ஆதரவை பெற்று மீண்டும் எதிர்கட்சித் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உரையாற்றிய ஜெரமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தன்னுடைய தலைமையின் கீழ் ஒன்றிணையுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஜெரமியின் வெற்றியை தொழிற்சங்க தலைவர்கள் வரவேற்றுள்ள போதிலும், பெரிய சவால் ஒன்றை தொழிற்கட்சி எதிர்நோக்கி காத்திருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.