இலங்கையில் புதிய அரசியலமைப்புக்கான தேவை தற்போது இல்லை என முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியினால் கொழும்பில் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, தற்போதய நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பைத் திருத்தியமைக்கக்கூடிய நிலைமை இருப்பினும், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தோரணையில், இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்ட கருத்தை, வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்