வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும், உந்துருளியில் பயணித்துக்கொணடு இருந்த போது, உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அவர் அதில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த அவர் உடனடியகாகவே மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்த பிராந்திய காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மரியாம்பிள்ளை அன்டனி ஜெயநாதன் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபையின் முதலாவது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 9,309 விருப்பு வாக்குளுடன் வட மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன் வட மாகாண சபையின் முதலாவது பிரதித் தலைவராகவும் அவரே நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது