கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டு்பிக்க்பபட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு இன்று விறகு வெட்டச் சென்றவர்களே சடலத்தைக் கண்டிருந்த நிலையில், கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்ற கிளிநொச்சி காவல்துறை தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யூனியன்குளம் மக்கள் குடியிருப்பில் இருந்து பல கிலோமீற்றர் தொலைவில் காட்டுப்பகுதியிலேயே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் மண் அகழ்வு மற்றும் மரக்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்ப்பாடுகள் நடைபெறுவதற்கான தடயங்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி குற்றத் தடயவியல் காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறைத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.