இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
தெற்கில் உள்ளவர்களுக்கு வடக்கிற்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உரிமை இல்லை என்று
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அவர் கூறுகின்ற கருத்தானது நாட்டை இரண்டாகப் பிரித்து இரண்டு நாடுகள் உருவானதற்கு ஒப்பானது என்றும், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அந்த கருத்து அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெற்கு மக்களுக்கு வடக்கிற்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய உரிமையுள்ள நிலையில் இவரது கருத்து பாதகமாக அமைந்துள்ளது என்றும், இதன் மூலம் நாடு இரண்டாக பிளவுபட்டுள்ளமை புலப்படுகின்றது எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.