தென் கொரியாவில் காபா புயல் தாக்கியதால் நாட்டின் தென்கிழக்குப் பகுதிகள் மற்றும் ஜேஜு தீவில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடுமையான காற்றுடன் கனமழை பெய்தது. பின்னர் புயல் கிழக்கு கடற்கரையோரம் கரை கடந்ததால் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் வீடுகளை இழந்ததாகவும் 2.29 லட்சம் குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.