நல்லிணக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கை எதிர்வரும் 15ஆம் நாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
இது குறித்து நல்லிணக்க செயலணியின் அங்கத்தவரான காமினி வியன்கொட விளக்கமளிக்கையில், நல்லிணக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக பல்வேறு அமர்வுகள் பிரதேச மட்டத்திலான செயலணிகள் உருவாக்கப்பட்டு மக்களின் கருத்துகள் திரட்டப்பட்டிருந்ததாக கூறியுள்ளார்.
அதன்படி பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், நல்லிணக்கத்திற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையில் நெறிப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் 15 ஆம் நாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதன் இறுதி அறிக்கை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாகவும் நல்லிணக்க செயலணியின் அங்கத்தவரான காமினி வியன்கொட கூறியுள்ளார்.