வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே அவருக்கு அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றை நடாத்திய அவர், வடமாகாண முதலமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமா என்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும், அவ்வாறு அச்சுறுத்தல் இருப்பது உண்மையானால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆனால் வெறும் அரசியல் தேவைகளுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ பாதுகாப்பு கேட்கப்படுமானால் அதை அரசு பெற்றுக்கொடுக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.