பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள ‘ஹைமா’ சூறாவளிக்கு 12இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ்சின் வடக்கு மாகாணங்களை நேற்று சுமார் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் ‘ஹைமா’ என்ற சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து பலத்த மழைப் பொழிவும் ஏற்பட்டதனால் அங்கு வெள்ள நிலமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவற்றின் தாக்கத்தினால் நாட்டின் வடபகுதியில் வாழும் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தற்போது தீவிரம் தணிந்து மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்துடன் அருகாமையில் உள்ள ஹாங்காங் நகரை நெருங்கிக்கொண்டிருக்கும் ‘ஹைமா’ சூறாவளி அங்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.