யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர், 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் நாள் இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலை மீது மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் 29ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையில் இன்று இடம்பெற் நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் பவானந்தராஜா உயிரிழந்த உத்தி யோகத்தர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட உத்தியோகத்தர்களின் உறவினர்கள் சுடரேற்றியும், மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் தமது வணக்கங்களைச் செலுத்தியுள்ளனர்.
குறித்த இந்த நினைவு வணக்க நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், தாதியர்கள் உட்பட, கொல்லப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.